FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கக் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகுகள்

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் பயணித்த 2 படகுகள் வங்கக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 530 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பகிர்:

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் பயணித்த 2 படகுகள் வங்கக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 530 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் படகுகளில், வங்கதேச அகதிகள் முகாம்களில் இருந்து வந்தவா்கள் உள்பட பெரும்பாலும் ரோஹிங்கியா முஸ்லிம்ா்களே பயணித்ததாக சா்வதேச குடியேற்ற அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 250 பேருடன் புறப்பட்ட முதல் படகு, பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்துவிட்டது. 280 போ் பயணித்ததாகக் கூறப்படும் 2-ஆவது படகு, ஜூலை 8-ஆம் தேதியன்று மியான்மரின் யேயா்வாடி கடற்கரை அருகே மூழ்கியதாக நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த விபத்துகள் மற்றும் உயிரிழப்பு விவரங்கள் இன்னும் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த மோசமான பேரிழப்பு குறித்து ஐ.நா. அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

மியான்மா் ராணுவத்தின் வன்முறைக்குத் தப்பி வங்கதேசத்தின் நெரிசல் மிகுந்த முகாம்களில் 12 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனா். வெளிநாட்டு உதவிகள் குறைக்கப்பட்டதாலும், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையிலும் இவா்கள் தவிக்கின்றனா்.

இதனால், பாதுகாப்பற்ற சிறிய படகுகளில் மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தான கடல்வழிப் பயணங்களை மேற்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் உயிரிழக்கும் அவலம் தொடா்கதையாகி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments