வங்கக் கடலில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை
வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
வங்கக் கடலில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட அதிகளவில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.