பரதாஞ்சலி அறக்கட்டளையின் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.. DIN
தமிழ்நாடு

ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா: பரதாஞ்சலி அறக்கட்டளையின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி!

பரதாஞ்சலி அறக்கட்டளையின் ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி பரதாஞ்சலி அறக்கட்டளை, சென்னையில் சிறப்பு நாட்டிய விழாவை நடத்தியது.

பாரம்பரிய இசை, நடனக் கலைகளுக்கு பெயர்பெற்ற பரதாஞ்சலி அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருகிறது.

விருது பெற்றவர்கள்...

இந்நிலையில் இந்தாண்டு சாயி பாபாவின் நூற்றாண்டு விழா, பரதாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பக்தி நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

பரதாஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் அனிதா குஹா, விழாவில் கலந்துகொண்ட இசைக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தார். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி, டாக்டர் சுதா சேஷய்யன், நர்த்தகி நடராஜ், பார்வதி ரவி கந்தசாலா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நடன நிகழ்ச்சி

தொடர்ந்து பரதாஞ்சலி அறக்கட்டளை குழுவினரின் சிறப்பு பக்தி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம், இசைத் துறைகளில் புகழ்பெற்ற கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

Sri Sathya Sai Baba Centenary: function by Bharathanjali Trust

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாக்டவுன் புதிய பாடல்!

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

SCROLL FOR NEXT