ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முதல்கட்ட தகவல் தெரிய வந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக தற்பொழுது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு செய்த நிலையில், வேளச்சேரியில் அருகே உள்ள மடிப்பாக்கத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபுவின் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.