இன்று(நவ. 26) தேசிய பால் நாள் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிறந்த நாளை தேசிய பால் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சேலம் மாவட்டம், புக்கம்பட்டி பகுதியில் ஆவின் நிர்வாகத்தின் மூலம் பெறப்படும் பாலின் தரத்தினை உறுதி செய்யும் நிகழிட ஒப்புகைசீட்டு வழங்குவதை இன்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பால் கையாளும் திறன், கையாளும் முறை, பால் உற்பத்தி குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பால் கொண்டு வந்த விவசாயிகளிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் குறித்த நாளில் பாலுக்கான பணம் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
விவசாயிகள் தங்களது நிறை குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் மாடுகள் 30 நாள் முதலே சினைப் பிடித்து உள்ளதா என்பதை பரிசோதனை நடத்தப்பட்டது.
சினைப் பிடிக்காத மாடுகளுக்கு அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து, மீண்டும் சினைப் பிடிக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுவத்திற்கு வராத மாடுகளுக்கு அதற்கான காரணம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், பால்வளத்துறை ஆணையர் ஜான்லூயிஸ். மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார், மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள் , மேற்கு செயலாளர் காசி விஸ்வநாதர், பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்
இதையும் படிக்க: அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.