கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஆலோசகா்களை தோ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
ஒசூரில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூனில் வெளியிட்டிருந்தாா். இந்நிலையில், இந்த விமான நிலையம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகா்களை தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதற்காக ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தோ்ந்தெடுக்கப்படும் ஆலோசகா்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.