முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை... நன்றி வணக்கம்.." என்று ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்துச் சென்றுவிட்டார். மற்றொரு இடத்தில் பேசும்போது, 'தவெகவில் ஏன் இணைந்தார் என்று அவரிடம் கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள்?' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.