முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

காங்கிரஸுடன் தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் பதில்

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:36 PM
செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:13 PM

தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நல்லதே நடக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில், தேர்தலில் யார் வேட்பாளர் என்று அறிவிக்கட்டும். எத்தனை பேர் எங்களை நாடி வருகின்றனர் என்பதைக் காண்பீர்கள். எனக்கு இங்கு மரியாதை கிடைக்கிறது என்பது எனக்கு தெரியும். மற்றவர்கள் உதாரணம் காட்டத் தேவையில்லை.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:28 PM

தமிழக வெற்றிக் கழகத் தலைவரைப் பொருத்தவரையில், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமன்றி, எல்லோரும் பண்பாளராக, எல்லோரும் நேசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்று தெரிவித்தார்.

Advertisement

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பத் தயாராக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறிய நிலையில், இதனை செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என்றும் செங்கோட்டையன் பதிலளித்தார்.

summary

Alliance with Congress: Only good things will happen, says TVK Leader Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.