முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Updated On : 28 நவம்பர், 2025 at 4:10 AM
தங்கம் விலை - ANI
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் நேற்று(வியாழன்) சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 94,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கு விற்பனையாகிறது.

அதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183- க்கும், ஒரு கிலோ ரூ.1,83,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நவ. 18 ஆம் தேதி ரூ. 91,200 வரை தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Chennai gold, silver prices today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.