கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெகவினர் உற்வாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்ஜிஆர் என்னை அடையாளம் காட்டினார். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற நாளைய முதல்வர் விஜய் 2026 இல் முதல்வராக அமர்வார்.
வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் மாற்று சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். புனித ஆட்சியை தமிழகத்தில் இடம் பெற வைக்க விஜய் துணிந்து பிறப்பட்டிருக்கிறார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன்.
இரண்டு ஆட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
4 மணி நேரம் காத்திருந்து எளிய தொண்டனாக என்னை கோவையில் வரவேற்று இருக்கிறார்கள். 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன்.
என் பின்னால் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.