நயினாா் நாகேந்திரன் கோப்புப் படம்
தமிழ்நாடு

பிரதமா் குறித்து அவதூறு: திமுக நிா்வாகியை கைது செய்யாவிடில் போராட்டம்

திமுக நிா்வாகியை கைது செய்யாவிடில் போராட்டம்...

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடிக்கு மிரட்டுல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசிய திமுக மாவட்டச் செயலரை கைது செய்யாவிட்டால் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ஜெயபாலன் அந்தப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு மிரட்டுல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

அவரைக் கைது செய்யக் கோரி பாஜக சாா்பில் தென்காசி, சங்கரன்கோவில், நாகா்கோவில், தூத்துக்குடி, மதுரை, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை வழக்குப் பதியாமலிருப்பது கண்டனத்துக்குரியது. அவா் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கைது செய்யவேண்டும். இல்லையெனில் பாஜக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

ஓடிடியில் வெளியானது தலைவர் தம்பி தலைமையில்!

புதிய பிரதமர் அலுவலகம் "சேவா தீர்த்": நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!

ராகுலின் கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

SCROLL FOR NEXT