டிட்வா புயல் பயணம் படம் - பிரதீப் ஜான்
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரை வழியாகச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வறண்ட காற்று உருவாகி புயல் வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''வறண்ட காற்று மற்றும் ஈரக்காற்று முறிவு காரணமாக டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவிழந்துள்ளது. மயிலாடுதுறையில் 140-220 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரிலும் மழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்துக்கு மேகக்கூட்டங்கள் ஏதுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும். எனினும், இன்று மாலை புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி வேலூர், ராணிப்பேட்டை உள்பட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழை பெய்யும். இன்று மாலை சென்னைக்கு மிக அருகில் புயல் வர வாய்ப்புள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது.

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.

இதையும் படிக்க | வலுவிழந்த டிட்வா புயல்: பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்!

Cyclone Ditwah gone missing weakened Depression

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

SCROLL FOR NEXT