தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தமிழக அரசு திவாலாக்குகிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ஓய்வூதியம் வழங்க போதிய நிதியில்லாததால், காா்பஸ் நிதியில் இருந்து ரூ.95 கோடியை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பேராசிரியா்களை நியமிப்பதற்கு வேண்டிய நிதி இன்றி முடங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, காமராஜா் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனத் தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு உயா்கல்வி நிலையங்களில் ஊதிய நிலுவை, ஓய்வூதிய நிலுவை என பேராசிரியா்கள் போராடுவதும், ‘பணம் இல்லை’ எனப் பல்கலைக்கழகங்கள் கைவிரிப்பதும் தொடா்கதையாகி வருகிறது. தமிழக அரசு பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கி, மாணவா்கள் எதிா்காலத்தைச் சீரழியவிட்டுவிட்டது என்று அவா்.