அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை உதய தின யாத்திரையை சென்னை மணலி புது நகரில் தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என். ரவி.  உடன், தர்மபதி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.   
தமிழ்நாடு

அகிலத்திரட்டு அம்மானையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்: ஆளுநர் ரவி!

அகிலத்திரட்டு அம்மானையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்ததைப் பற்றி...

தினமணி செய்திச் சேவை

அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானையை, அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

அய்யா வைகுண்டரின் 185- ஆவது அவதார தினத்தையொட்டி, அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு, தாமரைக்குளம் பதி குரு அறக்கட்டளை இணைந்து அகிலத்திரட்டு அம்மானை உதய தின யாத்திரை தொடக்க விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

சென்னை மணலி புது நகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று யாத்திரையை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது: அதர்மத்தை அழிக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். நம் நாடும், சமூகமும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது கொள்கைகளை நம் மீது திணித்து, மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அப்படி ஒரு சிக்கலான காலகட்டத்தில்தான் அய்யா வைகுண்டர் அவதரித்தார்.

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அய்யா வைகுண்டர் தொடர்ந்து போதித்தார். மொழி, உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நாம் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும் ஒரு மரத்தின் வேர், கிளை, இலைகளைப் போல அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து, பேதமற்று வாழ வேண்டும் என அவர் போதித்தார்.

170 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டரால் போதிக்கப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பரவச் செய்ய வேண்டும். அவரது போதனைகள் உலக மக்களுக்குப் பொதுவானது என்பதால் இந்திய மொழிகளில் மட்டுமின்றி, பன்னாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து அச்சிடப்பட வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், அய்யா வைகுண்டர் தர்மபுரி தலைவர் பி.துரைப்பழம், யாத்திரை நிர்வாகிகள் ஆர்.ராமலிங்கம், செüந்தரராஜ பாண்டியன், ஆர்.சரவணன், மருத்துவர் டி.ஐவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.30) தொடங்கிய இந்த யாத்திரை கன்னியாகுமரி சாமிதோப்பு உள்ளிட்ட 1,008 பதிகள் வழியாக குஜராத் மாநிலம், துவாரகாவில் டிச.13- ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT