முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை

இணையதளச் செய்திப் பிரிவு

ராமநாதபுரத்தில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்துக்கு வருகை தருகிறார்.

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) ராமநாதபுரம் வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் பகுதியில் நடைபெறவுள்ள விழாவில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வா் ஸ்டாலின் இன்று (அக்.2) ராமநாதபுரத்துக்கு வருகைதருகிறார்.

அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் பாா்த்திபனூரில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனா். இதன் பின்னா் முதல்வா் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுப்பாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பேராவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ராமநாதபுரத்துக்கு கடந்த திங்கள்கிழமையிலேயே முதல்வர் வருகைதர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் பலி சம்பவம் காரணமாக நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

முதல்வா் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ட்ரோன் பறக்க மாவட்ட காவல்துறை தடை விதித்ததுடன், ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

CM Stalin visits Ramanathapuram Today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT