கரூரில் பலியானோரின் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சந்திப்பு DPS
தமிழ்நாடு

கரூர் பலி: குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலர் ஆறுதல்!

கரூரில் பலியானோரின் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சந்திப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் விஜய் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவருடன் இருந்தனர்.

கரூரில் கடந்த 27 ஆம் தேதி இரவு தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி, கேரளத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர் பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், அப்பகுதியில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து கூட்ட நெரிசலில் பலியான இரண்டு வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Karur stampede Marxist Communist Party General Secretary met affected family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT