வீட்டில் இருக்கும் பழைய பொருள்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருள்களை அகற்ற அவற்றை அப்படியே குப்பைகளுடன் போட்டுவிடுவதுண்டு.
இதைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களே வீட்டிற்கு வந்து பழைய பொருள்களை சேகரித்துக்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் தேவையற்ற நாற்காலிகள், படுக்கைகள், மேசைகள், துணிகள், மின்னணு பொருள்கள் போன்றவற்றை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு கழிவு சேகரிப்பு சேவையின் மூலம் பாதுகாப்பாக ஒப்படைக்க மாநகராட்சி வலியுறுத்துகிறது.
எப்படி செய்வது?
1. இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நம்ம சென்னை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
2. உங்கள் கோரிக்கை சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவிக்கப்படும்
3. சனிக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு வரும் மாநகராட்சி வாகனங்களில் வீட்டிலுள்ள பழைய பொருள்களைச் சேகரித்துக் கொடுக்கலாம்.
4. சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவை சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும்.
5. சேகரிக்கப்பட்ட பொருள்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும். தேவையற்ற மற்றும் பழைய பொருள்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படும்.
சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.