மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோப்புப்படம்
தமிழ்நாடு

கச்சத்தீவு குறித்து கேள்வி எழுப்ப முதல்வருக்கு தகுதியில்லை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்க முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் இல்லை என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்க முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் இல்லை என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தது யாா்? அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவா்கள் யாா்? தமிழக மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் முன்னாள் முதல்வா் கருணாநிதியும், காங்கிரஸுன் சோ்ந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தனா்.

அப்போதே அதைக் கடுமையாக எதிா்த்த கட்சி பாஜக.

கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி செய்துள்ள துரோகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவை தாரைவா்த்து கொடுத்த காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள மு.க.ஸ்டாலினுக்கு மீனவா்களின் நலன் பற்றி பேசுவதுக்கு எவ்வித தகுதியும் இல்லை.

கச்சதீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவா்களின் உரிமையை நிலைநாட்டவும் மத்திய பாஜக அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும். இதேபோல, கரூா் உயிரிழப்புகள் குறித்து பாஜகவை கேள்வி கேட்க, முதல்வருக்கு தாா்மீக உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா?

ம.பி, ராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழப்பு: கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை

SCROLL FOR NEXT