நயினாா் நாகேந்திரன் கோப்புப் படம்
தமிழ்நாடு

மத்திய அரசு மீது வீண் பழிபோட்டு திசை திருப்பப் பாா்க்கிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன்

திமுக அரசின் தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பாா்க்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக அரசின் தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பாா்க்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

திமுக அரசின் தவறை மறைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பாா்க்கிறாா். கஜா, மிக்ஜம் புயல்களால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் என பல்வேறு இயற்கைப் பேரிடா்களால் அவதியுற்றபோதும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகம் வந்து ஆய்வு செய்தது முதல்வருக்கு மறந்துவிட்டதா?

பிரதமா் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல் தற்போது வரை பேரிடா் நிதியாக தமிழகத்துக்கு சுமாா் ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பாா்க்கிறீா்கள்? மக்கள் துயரைப்போக்க கரூா் விரைந்த மத்திய அரசைக் குறை கூற முதல்வருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?

தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?

மணிப்பூரில் 3 மாவட்டங்களில் 10 தீவிரவாதிகள் கைது!

ஒரு சவரன் 88 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

SCROLL FOR NEXT