'டிஜிட்டல் அரெஸ்ட்' எனப்படும் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்காமல் இருக்கும் வகையில் பொதுமக்களுக்கு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அவை,
வங்கிக் கணக்குகளை திறப்பது, சிம் பாக்ஸ்களை இயக்குவது, சிம் பாக்ஸ் அல்லது எந்தவொரு மின்னணு சாதனத்தையும் மறைவாக எடுத்துச் செல்வது போன்ற வேலைகளுக்கான கமிஷன் வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம். இவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
நீங்கள் குற்றச்செயலில் தொடர்புடையவர் என்று கூறும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றால் பதற்றம் கொள்ள வேண்டாம். மோசடிக்காரர்கள் பயத்தை உண்டாக்கி பணம் பெற முயல்வார்கள். 'டிஜிட்டல் கைது' அல்லது ஆன்லைன் கைது என்ற கருத்தே இல்லை.
அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் எந்த புகார் அல்லது சரிபார்ப்பிற்காகவும் பணம் கேட்க மாட்டார்கள்.
ஆதார், பான் (PAN), வங்கி விவரங்கள் அல்லது ஓடிபி-கள் (OTP) உள்ளிட்ட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை தொலைபேசி அல்லது விடியோ அழைப்பின் மூலம் பிறருக்கு பகிர வேண்டாம்.
அதிகாரிகள் எனக் கூறி, செய்யறிவு (ஏஐ) அல்லது பதிவுசெய்யப்பட்ட விடியோக்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயலும் அந்நியர்களிடமிருந்து வரும் விடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
AnyDesk, TeamViewer போன்ற ரிமோட் அணுகல் செயலிகளை அந்நியர்கள் கேட்டால் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; இது உங்கள் கருவியை மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும்.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.