கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்த நிலையில், தவெக தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அரசியல் கட்சிகளின் சாலை வல நிகழ்ச்சிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூட்ட நெரிசலில் தொண்டர்கள் சிக்கியபோதும் விஜய் உள்பட தவெக நிர்வாகிகள் சென்றுவிட்டதாக அதிருப்தி தெரிவித்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வழக்குரைஞர்கள் குழுவுடன் தவெக ஆலோசித்து வருகிறது.
தமிழக காவல்துறை செய்த தவறுகளை விவரிப்பதுடன், சிபிஐ விசாரணையையும் கோரவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், அதற்கடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இறுதியான முடிவு வெளிவந்த பின்னரே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இயலும்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.