தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு செங்கல்பட்டு மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தும், விழா மலரை வெளியிட்டும் பேசினார்.
இந்த விழாவில் பங்கேற்றதை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.