தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 15 - 20க்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அக்டோபர் - டிசம்பரில் தமிழகத்தில் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அக்டோபரில் வழக்கத்தைவிட 15 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 15- 20 க்குள் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக ஊடக பக்கத்தில்,
"அக்டோபர் மாதம் மழையுடன் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, சேலம், நாமக்கல், விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தீபாவளி அன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் அக். 15 -20க்கும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
2011ல் சென்னையில் தீபாவளி சமயத்தில் மழைப்பொழிவு அதிகம் இருந்தது. அதைத் தவிர்த்து கடந்த 20 ஆண்டுகளாக தீபாவளி நேரத்தில் சென்னை வறண்டுதான் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி நேரத்தில் வட மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.