தமிழகத்தில் இன்று காலாண்டு விடுமுறை நிறைவுபெற்று, பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பினர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் நாள் என்பதால், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இரண்டாம் பருவத்துக்கான பாட நூல்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது.
விடுமுறை நிறைவு பெற்று, இன்று பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்திருந்ததால், இன்று பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே, முன்னேற்பாடுகளை பள்ளிகள் எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.
பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவத்துக்கான பாட நூல்களையும் இன்று விநியோகிக்கும் வகையில், பல பள்ளிகளுக்கு முன்கூட்டியே புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.