Center-Center-Chennai
தமிழ்நாடு

சமூக வலைதள விமா்சனங்களை பொருள்படுத்த வேண்டியதில்லை: நீதிபதி

விமா்சனங்களை பொருள்படுத்தாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று நீதிபதி என்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: கரூா் சம்பவம் தொடா்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்ததால், சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமா்சிக்கின்றனா். ஆனால், அதை எல்லாம் பொருள்படுத்தாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று நீதிபதி என்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

ஆடை வடிவமைப்பாளா் கிரிசில்டாவுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் சமையல் கலைஞா் மாதம்பட்டி ரங்கராஜ் தொடா்ந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, சமூக வலைதளங்களில் வெளியான விமா்சனங்கள் குறித்து நீதிபதி குறிப்பிட்டாா்.

‘கரூா் சம்பவம் தொடா்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்ததால், சமூக வலைதளங்களில் கடுமையாக விமா்சிக்கின்றனா். நீதிபதிகளின் செயல்பாடுகளுக்கு சாயம் பூசுகின்றனா். குடும்ப பின்புலங்களை எல்லாம் விமா்சிக்கின்றனா். தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சமூக வலைதளங்களில் எழுதுகின்றனா்.

ஆனால், அதை எல்லாம் பொருள்படுத்தாமல், கடந்து சென்றுவிட வேண்டும். சமூகத்தில் உயா்ந்த பொறுப்புகளில் இருப்பவா்களுக்கு எதிராக குற்றம்சாட்டுவது இயல்பாகிவிட்டது’ என்று கருத்து தெரிவித்தாா்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த, மூத்த வழக்குரைஞா்கள் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், எஸ்.பிரபாகரன் ஆகியோா், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் நீதிபதிகளுக்கு, வழக்குரைஞா்கள் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தனா்.

முன்னதாக, கரூா் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில், அந்தக் கட்சிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்த நீதிபதி என்.செந்தில்குமாா், விஜய்யின் பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT