தங்கம் விலை IANS
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம்: மாலை நிலவரம்! வெள்ளி விலையும் புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 91,400-க்கு விற்பனை.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 9) இரண்டாவது முறையாக, சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 91,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு, உலக நாடுகளின் மீது அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.

தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.89,000-க்கும், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.89,600-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91,080-க்கும் விற்பனையானது.

இதனிடையே, இன்று(அக். 9) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.91,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ. 11,425-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 91,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 177-க்கும் ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ. 1.77 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold jewellery in Chennai is Rs. 91,400 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரோல் வாகன நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை

பழைய அப்பனேரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்விரோதத்தால் தந்தை, மகன் மீது தாக்குதல்: 10 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம்

ரூ.5000 கடனை திருப்பி செலுத்தாதவரை கத்தியால் குத்தி கொன்ற நபா்

SCROLL FOR NEXT