சென்னை உயா்நீதிமன்றம் அருகே தனது காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
சென்னை உயா்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்கம் முன் கடந்த அக்.7 ஆம் தேதி எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்பது தெரியவருகிறது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து வழக்குப் பதிந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.