கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று(அக். 11) நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,தென்காசி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை(மஞ்சள் எச்சரிக்கை) பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 5 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

IMD issued orange alert for 4 districts in tamilnadu today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெல்லிடை... ஃபர்னாஸ் ஷெட்டி!

கொம்புசீவி டீசர்!

உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து!

SCROLL FOR NEXT