சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் தேமுதிக அலுலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே இதுகுறித்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மிரட்டலைத் தொடர்ந்து நிகழ்விடத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த சிலநாள்காக முக்கிய இடங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சனிக்கிழமை சென்னையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், நடிகா் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீடுகளில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.