சென்னை: மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச் செயலகத்தில் நவ. 5-ஆம் தேதி தொடங்குகிறது.
இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடக்க மற்றும் நிறைவுரை ஆற்றவுள்ளாா்.
இதற்கான அதிகாரபூா்வ தகவலை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.