வால்பாறையில் காட்டு யானை தாக்கி பாட்டி, பேத்தி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அசலா என்ற தோட்டத் தொழிலாளியின் வீட்டை காட்டு யானை இடித்தது.
யானை இடிக்கும் சப்தத்தைக் கேட்டு வீட்டிலிருந்த அசலா, தனது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக்கொண்டு முன்வாசல் வழியாக வெளியில் வந்தார்.
அப்போது காட்டு யானை பாட்டியையும் பேத்தியையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானாள்.
உயிருக்குப் போராடிய அசலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார்.
ஒரே நேரத்தில் பாட்டியும் பேத்தியும் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.