கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜரான பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும். அடுத்த குறுக்கு விசாரணை நவ.11ஆம் தேதி நடைபெறும்போது நானே குறுக்கு விசாரணை நடத்தப்போகிறேன்.
டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து அவரது 40 ஆண்டு அரசியல் குறித்து தெரிவிக்க உள்ளேன். கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. யார் சார்ந்த நபராக இருந்தாலும் கரூர் துயரச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்.
ஒரு தலைவராக சீமானை மதிக்கிறேன். கரூர் வழக்கில் அவர் ஏன் பதற்றப்படுகிறார் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது சிபிஐ விசாரணைகளை கேட்ட திமுக இப்போது ஏன் வேண்டாம் என்கிறது. கரூர் வழக்கில் போலியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.