தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

உண்மைகளை மறுக்கிறார் முதல்வர்

கரூர் விவகாரத்தில் உண்மைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றிலுமாக மறுக்கிறார் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

தினமணி செய்திச் சேவை

கரூர் விவகாரத்தில் உண்மைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றிலுமாக மறுக்கிறார் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகரில் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் பல்வேறு தவறுகள் உள்ளன. தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்ததாக தெரிவித்தார். கூட்டத்துக்கு விஜய் தாமதமாகவே வந்தாலும், அங்குள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.

அதேபோல், விஜய் கூட்டத்தில் பாட்டு பாடியபோது, அவர் மீது காலணி வீசப்பட்டது; தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றிலுமாக மறுத்துவிட்டார். விஜய் இதற்கு முன்பு மேற்கொண்ட பிரசாரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வரவில்லை. கரூரில் மட்டும் பிரச்னைகள் வருவதற்கான காரணம் என்ன?

தவெக சார்பில் கோரிக்கை விடப்பட்ட இடத்தை வழங்கியிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். தற்போது உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. விசாரணையில்போது, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிவரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டி

கொடைக்கானலில் கலைத் திருவிழா

சென்னை - போத்தனூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாகா்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு

SCROLL FOR NEXT