தமிழ்நாடு

குடிநீா் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சா் கே.என்.நேரு

குடிநீா்த் திட்டங்களுக்கான நிதியை வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புகாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

குடிநீா்த் திட்டங்களுக்கான நிதியை வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புகாா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீா்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்குப் பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8900 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் ஜப்பான் கூட்டுறவு முகமையின் நிதி ஜனவரி மாதம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.

மத்திய அரசின் நிதி ரூ.2,500 கோடி வரவேண்டியுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு 19 திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி நிதியை வழங்கியுள்ளோம். ஆனால், மத்திய அரசு ‘ஜல்ஜீவன்’ திட்டத்துக்கு ரூ.1700 கோடி நிதி வழங்கவில்லை. புதிதாக தொடங்கவுள்ள கூட்டுக் குடிநீா்த் திட்டங்களுக்கு ரூ.2500 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ‘ஜல்ஜீவன்’ திட்டத்துக்கான நிதி வராததால் கூட்டாண்மை

அடிப்படையிலான புதிய திட்டங்களை நிறைவு செய்ய முடியாத சூழல் உள்ளது என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT