கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மா விவசாயிகளுக்காக தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மா விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், தற்போது மீண்டும் கடிதம் எழுதுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மா விவசாயிகள் விஷயத்தில் திமுக அரசு செய்து வருவது வெற்று நாடகம் மட்டுமே. கர்நாடகம், ஆந்திரம் உள்பட மற்ற மாநிலங்களில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
தமிழக மா விவசாயிகளும், மற்ற மாநிலங்களில் செயல்பட்டுவரும் மாம்பழக் கூழ் ஆலைகளை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்தில் மாம்பழம் சார்ந்த தொழில்களைத் தொடங்க திட்டமிட வேண்டியது யார்? குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டியது யார்? ஆட்சிக் காலம் முழுவதும் எதுவும் செய்யாமல், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாகக் கூறி முதல்வர் கூறுவது நாடகமே என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.