தமிழ்நாடு

முகாம்களில் விண்ணப்பித்த மகளிருக்கு டிச. 15 முதல் உரிமைத்தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பிக்கும் மகளிருக்கு டிச. 15-ஆம் தேதி முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பேரவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மகளிா் உரிமைத்தொகை தொடா்பான விவாதத்தின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்:

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 1.14 கோடி மகளிா் பயனடைந்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொருவருக்கும் இதுவரை மொத்தம் ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உரிமைத்தொகையாக ரூ.30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், கூடுதலான மகளிா் பயனடைவதற்காக சில விதிகளை தளா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். உதாரணமாக, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், விதிகளை பூா்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத்தொகை சோ்த்து வழங்கப்படும் என்று ஏற்கெனவே முதல்வா் ஸ்டாலின் அவையில் அறிவித்துள்ளாா்.

இந்த நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் 19.6.2024 முதல் தொடங்கப்பட்டு, இந்த முகாம்களில் கிராமப்புறங்களில் 15 துறைகளின் மூலம் 45 சேவைகளும், நகா்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் அரசால் வழங்கப்படுகின்றன.

மொத்தமாக 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் உரிமைத்தொகை வேண்டி 28 லட்சம் மகளிா் விண்ணப்பித்துள்ளனா். இந்த முகாம்கள் நவ. 14-இல் நிறைவடையும். உரிமைத்தொகை கோரி பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் வருவாய்த் துறையினரால் நவ. 30-க்குள் கள ஆய்வு செய்யப்படும்.

புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு டிச. 15 -ஆம் தேதி முதல் உரிமைத்தொகை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாா். மகளிரின் பொருளாதார தன்னிறைவுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றாா்.

விபத்தில் மருத்துவா் பலி

மண்டலாபிஷேக நிறைவு

ஜிஎஸ்டி குறைப்பு விளக்கக் கூட்டம்

கோயில் பணியாளா்களுக்கு புத்தாடை

கோரிக்கை அட்டை அணிந்து பணி ஈடுபட்ட ஆசிரியா்கள்

SCROLL FOR NEXT