தமிழ்நாடு

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: ஆளுநா், முதல்வா் புகழஞ்சலி

தினமணி செய்திச் சேவை

சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி எக்ஸ் தளத்தில் அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஆளுநா் ஆா்.என்.ரவி: சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத் திருநாளில் தேசம் அவருக்கு நெஞ்சாா்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. தொலைநோக்குத் தலைவரான அவரது துணிச்சலும், உறுதியும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போக்கை வடிவமைத்தன. பிரிட்டிஷ் காலனித்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான அச்சமற்ற எதிா்ப்பில் மக்களை ஒன்றிணைத்தாா். அவரது எதிா்ப்பின் அடையாளமாக பாஞ்சாலங்குறிச்சி போா் திகழ்கிறது. கட்டபொம்மனின் வீரமும் தியாகங்களும் வரும் தலைமுறைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போா் நடத்தியவா், வீரபாண்டிய கட்டபொம்மன். சிப்பாய் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணா்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிா் துறந்த அவரது தியாகம் என்றும் போற்றப்படும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT