தங்கம் விலை ஒரு லட்சத்தை நெருங்கியது! இன்று ரூ. 2,400 உயர்வு!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் விலை அதிகரித்து வருகின்றது.
தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ஒரு சவரனுக்கு ரூ. 1,960, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை ரூ. 320 உயர்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ. 2,400 உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 12,200-க்கும் ஒரு சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்து, ரூ. 203-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold price nears Rs 1 lakh: Today, Rs 2,400 increase
இதையும் படிக்க : கரூர் பலி: சிபிஐ குழுவினர் கரூர் வருகை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.