காற்றழுத்த தாழ்வுப்பகுதி 
தமிழ்நாடு

வங்கக்கடலில் முன்பே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் முன்பே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக். 21-ஆம் தேதியை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழைபெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து அதேபகுதியில் நிலவுகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலாக வலுவடைந்து தெற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலுக்காக பிரச்னையாக்கும் திமுக -நயினாா் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அரசின் நடவடிக்கையால்தான் பதற்றம்: க. கிருஷ்ணசாமி

போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்!

குருகிராம்: காா் டயா், ரிம்களை திருடியதாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

SCROLL FOR NEXT