தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதி

கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈரியூா் கிராமத்தில் தங்களது வீட்டில் பொன்னுசாமி, அவரது மனைவி உறங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிவாயு பரவியிருந்தது.

இந்த நிலையில், திடீரென வீடு முழுவதும் தீப்பிடித்து சேதம் ஏற்பட்டது. இதில், பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொன்னுசாமியின் மனைவிக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT