தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

ரூ. 20 லட்சம் - பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியது தவெக!

கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு தவெக ரூ. 20 லட்சம் வழங்கியிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம்.

இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.

இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம்.

அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay has said that we will definitely meet the victims once permission is granted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

கிணற்றில் கழிவுகளைக் கொட்ட வந்த பல்லடம் நகராட்சி லாரி சிறைபிடிப்பு

SCROLL FOR NEXT