சென்னை, புறநகரில் அக். 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 
தமிழ்நாடு

அக். 22, 23-ல் சென்னை, புறநகரில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, புறநகரில் அக். 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம) உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 21-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் அக். 22 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

வரும் அக். 23 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை

உறக்கத்தைத் தொலைத்த பயணம்... ரோஸ் சர்தானா!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

SCROLL FOR NEXT