கோப்புப் படம் 
தமிழ்நாடு

கனமழை: 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை விரைந்து மாவட்டங்களுக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

  • திருவள்ளுர் - மரு. கே.பி. கார்த்திகேயன், மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை

  • காஞ்சிபுரம் - கே.எஸ்.கந்தசாமி, மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை

  • செங்கல்பட்டு - கிரந்தி குமார் பாடி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை

  • விழுப்புரம் - எஸ்.ஏ. இராமன், இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை

  • கடலூர் - டி.மோகன், இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை

  • மயிலாடுதுறை - கவிதா ராமு, மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை

  • திருவாரூர் - டி. ஆனந்த், ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை

  • நாகப்பட்டினம் - ஏ.அண்ணாதுரை, மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை

  • தஞ்சாவூர் - எச். கிருஷ்ணனுன்னி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை

  • கள்ளக்குறிச்சி - பி. ஸ்ரீ வெங்கடபிரியா, செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை

  • அரியலூர் - எம். விஜயலட்சுமி, ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை

  • பெரம்பலூர் - எம். இலட்சுமி, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை

சென்னையைப் பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க | வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி!

பிரச்னையான அரசாக திமுக: தமிழிசை

பாக்கெட்டுகளில் பொருள்களை வாங்கி ரீஃபிள் செய்பவரா நீங்கள்?

ஓடிடியில் சர்வம் மாயா..! 7 மொழிகளில் ரிலீஸ்!

ஒரிஜினல் பட்டுப் புடவையா என்பதை அறிவது எப்படி?

SCROLL FOR NEXT