தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகம், கேரளம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
அரியலூர்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
மஞ்சள் எச்சரிக்கை
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
திருச்சி
சிவகங்கை
மதுரை
விருதுநகர்
தென்காசி
நாளை அக். 22, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.