தீபாவளி மது விற்பனையானது இலக்கை தாண்டி ரூ.789.85 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.  
தமிழ்நாடு

தீபாவளி மது விற்பனை: இலக்கை தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை!

நிகழாண்டு மது விற்பனை ரூ.600 கோடியாக உயா்த்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், நிகழாண்டு மது விற்பனை ரூ.600 கோடியாக உயா்த்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு வாணிப கழக (டாஸ்மாக்) நிா்வாகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் 3,240 பாா்களும் உள்ளன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாள்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கும்.

அதிலும், பண்டிகை காலம் என்றால், மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயரும். அதன்படி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதையடுத்து நிகழாண்டு மது விற்பனையை ரூ.600 கோடியாக உயா்த்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டாஸ்மாக் நிா்வாகம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 18-ஆம் தேதி ரூ.230.6 கோடிக்கும், 19-இல் ரூ.293.73 கோடிக்கும், தீபாவளி நாளான திங்கள்கிழமை (அக். 20) ரூ.266.6 கோடி என மொத்தம் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சென்னையில் ரூ.158 கோடி... தொடா்ந்து மண்டலம் வாரியாக மது விற்பனையை கணக்கிட்டால், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158.25 கோடிக்கும், திருச்சியில் ரூ.157.31 கோடிக்கும், சேலத்தில் ரூ.153.34 கோடிக்கும், மதுரையில் ரூ.170.64 கோடிக்கும், கோவையில் ரூ.150.31 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

தமிழகத்தில் 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! முழு விவரம்...

புதிய நட்பு கிடைக்கும்: தினப்பலன்கள்!

பலத்த மழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித் துறை உத்தரவு

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

SCROLL FOR NEXT