தங்கம் விலை நிலவரம். 
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 3,680 குறைவு! வெள்ளி விலையும் குறைவு!

இன்று மாலை தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. கடந்த அக். 18-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனையானது.

தொடர்ந்து, தீபாவளியன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.

இதனிடையே, இன்று(அக். 22) காலை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து ஒரு சவரன் 93,600-க்கும் கிராமுக்கு ரூ. 300 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,700 -க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் கிராமுக்கு ரூ. 160 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,540-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 175-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold jewellery in Chennai has fallen by Rs. 1,280 per sovereign for the second time in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிழைத் தோற்றங்கள்... ஹீனா கான்!

தொல்காப்பியப் பூங்கா பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டண விவரங்கள்!

லோகா ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தீபாவளி... நிக்கி தம்போலி!

ரோசா ரோசா ரோசாப்பூ... அனன்யா நாகல்லா!

SCROLL FOR NEXT