முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 17 மார்ச் 2026, 10:16 am IST
கோப்புப்படம் - படம்: DNS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

கடந்த மார்ச் 12-இல் சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,19,760-க்கும், மார்ச் 13-இல் சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 1,19,200-க்கும், மார்ச் 14-இல் சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,18,080-க்கும் விற்பனையானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 1,17,200-க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ. 14,650-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 4,000 குறைந்து ரூ. 2.76 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of gold ornaments in Chennai today (March 17) decreased by Rs. 480 per sovereign and is being sold at Rs. 1,17,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.