கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை!

மழை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நாளை (25-10-2025) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகிற 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வருகிற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக் கூடும் என்றும் இதனால் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 7 மணி வரை)

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும்

கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை லேசானது முதல் மிதமான மழையும்

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுக்கப்படும் உரிமை!

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நயினாா் நாகேந்திரன்

நிறுத்தத்தை தாண்டி பெண்களை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT