சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரில் பிரியங்கா ஷிவன்னா இணைந்துள்ளார்.
அன்னம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அன்னம் தொடரின் பிரதான பாத்திரங்களில் அயலி தொடர் பிரபலம் அபி நட்சத்திரா, கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தத் தொடரிலிருந்து, ரம்யா பாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா கணேசன் திடீரென விலகினார். அவர் பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டின் மூலம் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்னம் தொடரில் ரம்யா பாத்திரத்தில் இனி பிரியங்கா ஷிவன்னா நடிக்கவுள்ளார்.
நடிகை பிரியங்கா ஷிவன்னா, கன்னட பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்று பிரபலமானவர். தெலுங்கு தொடர்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர்.
நாக பஞ்சமி தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ராஜகுமாரி, கிருஷ்ண துளசி ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: போட்டியாளர்களின் உடமைகளைப் பறித்த பிக் பாஸ்! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.