கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழையும் மிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.

இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் மோந்தா புயல்! | செய்திகள்: சில வரிகளில் | 27.10.25

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சிவப்பு எனக்குப் பிடிக்கும்... நேகா சர்மா!

அக்டோபர் சீசன்... நிம்ரத் கௌர்!

பழுப்பு என்பது நிறமல்ல... நிவிஷா!

SCROLL FOR NEXT